
கோலாத் திரெங்கானு, பிப் 23 – திரெங்கானுவில் உள்ள ரமலான் சந்தையில் இரண்டு குச்சிகள்
கொண்ட நாகெட்டுகள் மற்றும் Sausages 6 ரிங்கிட்டிற்கு விற்கப்பட்டது குறித்து பெண் ஒருவர் தனது ஆதங்கத்தையும் விரக்தியையும் சமூக வலைத்தளத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
Kuala Ibai சந்தையில் வாங்கிய வறுத்த நாகெட்டுள் , Sausages களின் புகைப்படத்தையும் அந்த பெண் Threads சில் பதிவிட்டுள்ளார்.
அந்த கடையில் எந்த விலைக் குறிப்பும் வைகப்படவில்லை என்பதோடு பணம் செலுத்தும் நேரத்தில் மட்டுமே விற்பனையாளர் விலையை வெளிப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த விலை குறித்து அதிர்ச்சியை வெளியிட்ட அப்பெண் ரமலான் சந்தையில் விற்கப்படும் பொருட்களின் விலைகளை கண்காணிக்கும்படி திரெங்கானு உள்நாடு வர்த்தகம் மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சின் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
இதனிடையே ரமலான் சந்தைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலை அதிகமாக இருப்பது குறித்து சில நெட்டிசன்களும் தங்களது கவலையைம் அதிர்ச்சியையும் வெளிப்படுத்தினர்.
ரமலான் சந்தையின் விலை வெளிப்படைத்தன்மை குறித்தும் சிலர் கேள்வி எழுப்பினர்.
இன்னும் சிலர் இதே போன்ற கருத்துக்களையும் வெளியிட்டனர்.
ரமலான் சந்தையில் மூன்று குச்சிகளுக்கு 15 ரிங்கிட் வசூலிக்கப்பட்ட கவலையும் ஒருவர் வெளிப்படுத்தினார்.



