Latestமலேசியா

திரெங்கானு: நத்தை ஓட்டப்பந்தயப் போட்டியில் RM1000 ரிங்கிட் வென்ற 11 வயது சிறுவன்

கோலாலம்பூர், செப்டம்பர் 27 – நத்தைகளுக்கு ஓட்டப்பந்தயமா என்று ஆச்சரியமாகக் கேட்கிறீர்களா?

ஆம், திரெங்கானுவில் 11 வயது சிறுவன், கடந்த வியாழன் அன்று, பான்தாய் டோக் ஜெம்பாலில் (Pantai Tok Jembal) நடைபெற்ற ‘siput race’ எனும் நத்தை ஓட்டப்பந்தயத்தில் தனது நத்தையின் மூலம் 1,000 ரிங்கிட் பரிசை வென்றுள்ளான்.

வெறும் 50 செனுக்கு வாங்கிய அந்த நத்தை, மொத்தம் 186 போட்டியாளர்களுடன் போட்டியிட்டு வென்றிருக்கிறது.

பெற்ற பணத்தைச் சேமித்து, வெற்றிபெற்ற நத்தையை நன்றாகக் கவனித்துக் கொள்வேன், என்று தெரிவித்திருக்கிறான் அந்த சிறுவன்.

டிக் டோக்கில் mud creeper பந்தயத்தைப் பார்த்து ஈர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, 1 ரிங்கிட் கட்டணத்துடன் இப்போட்டியை நடத்தியதாக அதன் ஏற்பாட்டாளர் முஹமட் யுஸ்ரி (Muhammad Yusri) தெரிவித்திருக்கிறார்.

2,000 பார்வையாளர்களை ஈர்த்த இந்த போட்டியில், ஆப்பிள் நத்தைகள், chisels நத்தைகள் போன்ற பல வகையான நத்தைகள் போட்டிக்களத்தில் இறக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!