Latestஉலகம்

தீக்குள்ளாகும் அபாயம்: உலகம் முழுவதும் லட்சக்கணக்கான கார்களை திரும்பப் பெறும் BMW

தீக்குள்ளாகும் அபாயம்: உலகம் முழுவதும் லட்சக்கணக்கான கார்களை திரும்பப் பெறும் BMW

மூனிக் , பிப்ரவரி-12,

வாகனங்கள் தீப்பிடிக்கக் கூடிய தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உலகளவில் லட்சக்கணக்கான வாகனங்களை BMW திரும்பப் பெறுகிறது என்று அந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளதாக ஜெர்மன் பத்திரிகை நிறுவனம் (dpa)
தகவல் வெளியிட்டுள்ளது.

ஜெர்மனியில் 28,582 வாகனங்கள் பாதிக்கப்பட்டுள்ள வேளையில், உலகளவில் பாதிக்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கைக்கு நிறுவனம் சரியான புள்ளிவிவரத்தை வழங்கவில்லை. ஆனால் ஜெர்மன் தொழில்துறை போர்டல் kfz-Betrieb சுமார் 575,000 யூனிட்டுகள் பாதிக்கப்படும் சாத்தியம் இருப்பதாக கோடிகாட்டியுள்ளது.

தயாரிப்பு ஆய்வுகளில் மின்சார ஓட்டத்தைக் கட்டுப்படுத்தும் சோலனாய்டு ( Solenoid ) சுவிட்சில் ஒரு தவறு இருப்பது கண்டறியப்பட்டது. பாதிக்கப்பட்ட மாடல்களில் BMW 2 சீரிஸ் கூபே (Coupe) , 3 ஆவது சீரிஸ், 4 ஆவது சீரிஸ், 5 சீரிஸின் சில வகைகளும் அடங்கும் . அடிக்கடி ஸ்டார்ட் செய்த பிறகு, சுவிட்ச் அதிகப்படியான தேய்மானத்தை சந்திக்க நேரிடும், இது இயந்திரத்தைத் தொடங்குவதை கடினமாகவோ அல்லது சாத்தியமற்றதாகவோ கூட மாற்றக்கூடும் என கூறப்படுகிறது.

இயந்திரம் அதிகமாக சூடு ஏறி ஓடும்போது அல்லது கார் நிறுத்தப்பட்டவுடன் புகை வரக்கூடும் என்பதால் இயந்திரத்தை கண்காணிக்காமல் விட்டுவிடக்கூடாது என்றும் ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!