தும்பாட், செப்டம்பர்-3 – கிளந்தான், தும்பாட்டில் மர்ம நபர்கள் மேற்கொண்ட கொள்ளை முயற்சியின் போது பாராங் கத்தி பட்டதில், சகோதரர்களான 2 பாகிஸ்தானிய ஆடவர்கள் காயமடைந்தனர்.
கம்போங் பெரியோக்கில் நேற்று நள்ளிரவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
முறையே 26, 33 வயதுடைய சகோதர்கள், தங்களின் மளிகைக் கடையிலிருந்த போது, முகத்தை மூடியிருந்த இருவர் பாராங் கத்திகளுடன் கடைக்குள் நுழைந்துள்ளனர்.
கொள்ளையர்களுடன் போராடிய போது, அவர்கள் பாராங் கத்தியை சுழற்றினர்.
அதில் பாகிஸ்தானிய சகோதரர்களில் ஒருவருக்கு இடது கையில் படுகாயமேற்பட்ட வேளை, இன்னொருவருக்கு சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டன.
இருவரும் தும்பாட் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
புரோட்டோன் சாகா காரில் தப்பியோடிய இரு கொள்ளையர்களையும், CCTV உதவியுடன் போலீஸ் தேடி வருகிறது.