ஜோகூர் பாரு, செப்டம்பர் 11 – Taman Perindusrian Tiong Nam மற்றும் Taman Perindustrian Tropika-வில் உள்ள இரசாயன கழிவுகளைச் சுத்தம் செய்து அகற்றும் பணி, எதிர்வரும் செப்டம்பர் 22ஆம் திகதி முழுமையடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
துப்புரவு பணி தொடங்குவதற்கு முன், ஒப்பந்ததாரர் அவர்கள் மேற்கொள்ளும் துப்புரவு முறைகள் குறித்து ஜோகூர் பாரு மாவட்ட பேரிடர் மேலாண்மை குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
அதற்கு ஒரு வாரம் காலம் எடுக்கும் என ஜோகூர் மாநில சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் குழுவின் தலைவர் லிங் தியான் சூன் கூறினார்.
ஆகையால், அப்பகுதியில் உள்ள கழிவுகளைத் துப்பரவு செய்து அகற்றும்வரை பொதுமக்கள் அவ்விடத்திற்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தியிருக்கிறார், அவர்.
ஒருவேளை, இந்த ரசாயன கழிவுகளை அகற்றுவதில் ஏற்படும் துர்நாற்றத்தில், மூச்சுத் திணறல், நெஞ்சு வலி, குமட்டல், வாந்தி, மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சிகிச்சை பெறுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.