
பெய்ஜிங், ஜூலை 14 – சீனாவில், 42 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவர் எந்த வகையான மேற்பரப்பிலும் பயணிக்கக்கூடிய, சிறப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட ‘படுக்கை கார்’ ஒன்றை கண்டுபிடித்து, அது தொடர்பான காணொளியை வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.
தனது குழந்தைப் பருவத்தில், பள்ளிக்கு சீக்கிரம் எழுந்திருப்பது தனக்கு மிகவும் கடினமாக இருந்ததெனவும், அதனால் படுக்கையில் இருந்தபடியே பள்ளிக்குச் செல்வதை போல் தான் அடிக்கடி கற்பனைச் செய்து பார்த்திருப்பதாகவும் அந்நபர் குறிப்பிட்டிருந்தார். அதன் விளைவாகவே, இந்த படுக்கை காரை அவர் உருவாகியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மெத்தை, மேஜை மற்றும் விளக்குகள் கொண்ட இந்த தனித்துவமான வாகனம், படிக்கட்டுகள், நீர்ப்பரப்பு பகுதிகள் மற்றும் சீரற்ற மேற்பரப்பிலும் விழாமல் பயணிக்கச் செய்கின்றது.
வருங்காலத்தில், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நடைமுறை செயல்பாடுகளைக் கொண்ட வாகனங்கள் அல்லது இயந்திரங்களையும் தான் உருவாக்க விரும்புவதாக அந்த நபர் தெரிவித்துள்ளார்.