Latestமலேசியா

தெனாகா நேசனல் இணைப்பை திருடியபோது மின்சாரம் தாக்கி ஆடவர் மரணம்

ஈப்போ, மார்ச் 25 – ஈப்போ தாமான் சிலிபின் ரியாவில் பெர்சியாரான் ரிஷா 27,இல் தெனகா நேஷனல் பெர்ஹாட் (TNB) நிறுவனத்திற்கு சொந்தமான மின் கம்பிகளை திருடியதாக நம்பப்பட்ட ஆடவர் ஒருவர் மின்சாரம் தாக்கி மரணம் அடைந்தார்.

நேற்று மாலை மணி 6.07 அளவில் பாதிக்கப்பட்ட நபரும் அவரது நண்பரும் மின் கம்பியை துண்டித்துக் கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கியதால் ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து அவர் மரணம் அடைந்ததாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் அபாங் ஜைனால் அபிடின் அபாங் அகமட் தெரிவித்தார்.

திடீரென கேபிள் வெடித்ததில் அந்த இரண்டு நபர்களும் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மயங்கி விழுந்தனர். அப்போது உயிர் பிழைத்த ஆடவர் விழித்துக்கொண்ட பின் தனது ஹோன்டா சி 100 மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனார்.

இச்சம்பவத்தில் மரணம் அடைந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது. இச்சம்பவம் குறித்து தெனாகா நேசனல் போலீசில் செய்துள்ளது. திருட்டு சம்பந்தமாக தண்டனைச் சட்டத்தின் 379 ஆவது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அபாங் ஜைனால் தெரிவித்தார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!