
தைப்பே, ஜூலை-7 – தைவானில் நேற்று Danas சூறாவளி கொண்டு வந்த கனழையால் பெருவெள்ளமும் நிலச்சரிவு சம்பவங்களும் ஏற்பட்டன.
இதனால் பாதுகாப்புக் கருதி 3,000 பேர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
அவர்கள் பெரும்பாலும் மலைப்பாங்கான பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
குறைந்தது 28 பேர் சிராய்ப்புக் காயங்களுக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
குறைந்தது 10 நிலச்சரிவு சம்பவங்கள் ஏற்பட்ட வேளை, 49 இடங்கள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.
மணிக்கு 137 கிலோ மீட்டர் வேகத்துக்கு சூறாவளியின் சீற்றம் அந்நாட்டின் மேற்குக்கரையை நேற்று நள்ளிரவு முதல் இன்று விடியற்காலை வரை தாக்கலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதனால் சேதங்கள் அதிகரிக்கும் என ஐயுறப்படுகிறது.