Latestமலேசியா

தொடர்பு-பல்லூடகச் சட்டத் திருத்தம்; போலிக் கணக்குகளைக் கையாள புதிய உட்பிரிவு சேர்க்கப்படுகிறது

கோலாலம்பூர், நவம்பர்-25 – சட்டம் 588 என சுருக்கமாக அழைக்கப்படும் 1998-ஆம் ஆண்டு தகவல் மற்றும் பல்லூடகச் சட்டத்தின் உத்தேசத் திருத்தம், அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றிருக்கிறது.

இதையடுத்து அடுத்த மாதம் அது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக, தொடர்புத் துறை துணையமைச்சர் தியோ நீ ச்சிங் (Teo Nie Ching) தெரிவித்தார்.

அச்சட்டத் திருத்தத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக, சமூக ஊடகங்களில் போலி கணக்குகளை முறியடிக்கும் நடவடிக்கையும் சேர்க்கப்பட்டுள்ளது.

அதாவது, சட்டம் 588-ன் அமுலாக்கத்தை வலுப்படுத்த ஏதுவாக, புதிய உட்பிரிவு சேர்க்கப்படுகிறது.

அப்புதிய உட்பிரிவு, போலி கணக்குகளின் உரிமையாளர்கள் குறித்த தரவுகளை சமூக ஊடக நிறுவனங்களிடமிருந்து கேட்டுப் பெற போலீசுக்கு அதிகாரம் வழங்கும்.

இதன் மூலம் போலீஸ் விசாரணையும் எளிதாகும் என துணையமைச்சர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் போலி கணக்குகளின் பின்னால் ஒளிந்துகொண்டு அவதூறு பரப்புவோரை முறியடிக்க அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகள் குறித்து மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு தியோ நீ ச்சிங் பதிலளித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!