Latestஉலகம்

தொழில்நுட்பக் கோளாறால் Facebook, Instagram, WhatsApp சேவைகள் பாதிப்பு; வருத்தம் தெரிவித்த Meta

நியூ யோர்க், டிசம்பர்-12, Facebook, Instagram, WhatsApp உள்ளிட்ட சமூக ஊடகங்கள் திடீர் தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளானதால், அவற்றின் தாய் நிறுவனமான Meta பயனர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளது.

ஏற்பட்ட அசௌகரியத்துக்கு வருந்துவதாகவும் தனது X தளத்தில் Meta தெரிவித்தது.

அக்கோளாறு 99% சரி செய்யப்பட்டு விட்டது; கடைசிக் கட்ட பரிசோதனைகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன; பொறுமைக்கு நன்றியென, 1 மணி நேரத்திற்கு முன்னர் வெளியிட்ட பதிவில் அந்நிறுவனம் கூறியது.

Facebook சேவைத் தடங்கல் குறித்து மட்டுமே அமெரிக்காவில் 100,000 பயனர்கள் முன்னதாகப் புகாரளித்தனர்.

உலகளவிலும் பல்லாயிரக்கணக்கானோர், Meta-வின் இதர சமூக ஊடகத் தடங்கல் குறித்து அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

இவ்வாண்டு தொடக்கத்தில் இதே போன்ற தொழில்நுட்பக் கோளாறால், உலகளவில் Facebook மற்றும் Instagram சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன.

பிறகு கடந்த அக்டோபரிலும் அவை பிரச்னையை எதிர்நோக்கின; எனினும் ஒரு மணி நேரத்திற்குள்ளாக கோளாறுகள் சரிசெய்யப்பட்டன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!