Latestமலேசியா

நச்சு திரவம் ஊற்றப்பட்டதால் 50 டெகோமா மரங்கள் பட்டுப்போனது; RM100,0000 மேல் இழப்பு

புக்கிட் மெர்தாஜம், டிச 24 – Sungai Rambai தாமரை குளத்தின் ரிவர் டிரெயில் (River Trail ) பொழுதுபோக்கு பூங்கா பகுதியில் நடப்பட்ட சுமார் 50 டெகோமா (Tecoma ) மரங்களுக்கு அடியில் பொறுப்பற்ற நபர்கள் நச்சு திரவம் ஊற்றியதைத் தொடர்ந்து அம்மரங்கள் பட்டுபோனதாக கூறப்பட்டது.

கடந்த சனிக்கிழமையன்று, இலைகள் உதிர்ந்து காய்ந்து இறக்கும் முன், மரங்களில் ஏதோ கோளாறு இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட பொதுமக்களிடமிருந்து புகார் கிடைத்தாக செபராங் பிறை நகரான்மைக்கழக உறுப்பினர் Bernard Cheen Goon Hooi தெரிவித்தார்.

வெப்பம் மற்றும் வறட்சியான வானிலை காரணமாக இந்த மரங்களில் இலைகள் உதிர்கின்றன என்று முதலில் நான் நினைத்தேன், ஆனால் நேற்று நிலைமையைப் பார்த்த பிறகு, நேர்மாறாக இருப்பதை உணர்ந்தேன்.

பல மரங்கள் பாதிக்கப்பட்டன, சில காய்ந்துவிட்டன, சில மஞ்சள் இலைகளுடன் பட்டுப்போயிள்ளன. இந்த மரங்களின் அடிப்பகுதியில் நச்சு திரவம் ஊற்றப்பட்டதாகத் தெரிவதால் அவற்றைச் சுற்றி வளரும் கிளைகள் காய்ந்து செயல் இழந்துவிட்டன என்பதை தெளிவாகக் காணலாம் என்று Bernard செய்தியாளர்களிடம் கூறினார்.

இதில் சம்பந்தப்பட்டவர்களை கண்டுப்பிடிப்பதற்கும் அவர்கள் ஏன் அப்படி நடந்துகொண்டனர் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவத்தால் செபெராங் பிறை நகரான்மைக் கழகத்திற்கு 100,0000 ரிங்கிட்டிற்கு மேல் இழப்பு ஏற்பட்டதாகவும், பட்டுப்போன மரங்கள் வெட்டப்பட்டு அவற்றுக்கு பதிலாக பதிய புதிய மரங்கள் நடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!