ஜோர்ஜ் டவுன், டிச 31 – அடுத்த வாரம் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு ஆதரவு தெரிவிக்கும் ஒருமைப்பாட்டு பேரணி ஒன்றில் பாஸ் கட்சியுடன் கைகோர்க்க முடிவு செய்துள்ள அம்னோவை பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் சாடினார். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை
அரசாங்கங்கத்தில் பங்காளியாக இருப்பதில் அம்னோவின் நேர்மை குறித்து சந்தேகம் எழுந்துள்ளதாக DAP யின் தலைவருமான அவர் தெரிவித்தார்.
எதிர்க் கட்சியான PAS உடனான எந்தவொரு கூட்டு நடவடிக்கையும் அம்னோவின் சொந்த அரசியல் நிலைத்தன்மை மற்றும் ஒற்றுமை அரசாங்கத்தில் அதன் நிலைப்பாடு பற்றிய சந்தேகங்களை எழுப்பும் என்பதை அக்கட்சி அறிந்திருக்க வேண்டும் என்று DAP யின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங்குடன் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கலந்துகொண்டபோது லிம் குவான் எங் கூறினார்.
அன்வாரின் அரச மன்னிப்பு 2018ஆம் ஆண்டில் மன்னிப்பு வாரியத்தின் மூலம் சென்றதா என்று கேள்வி எழுப்பியதற்காக அம்னோ இளைஞர் பிரிவின் தலைவர் டாக்டர் அக்மல் சலேவின் நோக்கத்தையும் லிம் சாடினார். பேரரசரின் அதிகாரம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வாரின் எம்.பி பதவி மற்றும் பிரதமரின் சட்டபூர்வமான தன்மை குறித்து அக்மால் அடிப்படையில் கேள்வி எழுப்பியுள்ளார். , இத்தகைய நடவடிக்கைகள் ஒற்றுமை அரசாங்கத்தின் அரசியல் நிலைத்தன்மை மற்றும் பிரதமரின் பதவிக்கு பகிரங்கமாக சவால் விடுப்பது மற்றும் கீழறுப்பு செய்யும் நோக்கத்தை கொண்டுள்ளது. ஒற்றுமை அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை நிலைநிறுத்தும் வகையில் இந்த நிலைமையை சரிசெய்வதற்கு பிரதமர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் லிம் குவான் எங் கேட்டுக்கொண்டார். நஜிப்பை வீட்டுக் காவலில் வைக்கும் துணை ஆணையின் மீதான விண்ணப்பத்தை மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரிக்கும் அதே நாளில் பாஸ் பேரணி நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.