
கோலாலம்பூர், செப்டம்பர் 17 – சபாவில் தொடர்ச்சியான கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளுக்கு முக்கிய காரணம் பலவீனமான மண் அமைப்பும், தொடர் சரிவுகள்தான் காரணம் என புவியியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செப்டம்பர் 11 ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் நிலச்சரிவுகளில் மொத்தம் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த வாரம் மலைப்பகுதியில் இருந்த ஒரு மரவீடு நிலச்சரிவால் புதையுண்டு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் பலியானது மிகக் கொடூரமான சம்பவமாகப் பதிவாகியுள்ளது.
அதேபோல், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக ஆய்வுகள் நடத்தி, மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பது அவசியம் என்றும், குறுகிய காலத்திலும் நீண்டகாலத்திலும் அதிகாரிகளும் பொதுமக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், காலநிலை மாற்றமும், சபாவில் அதிகரித்து வரும் நிலநடுக்கங்களும் எதிர்காலத்தில் நிலச்சரிவு அபாயத்தை மேலும் மோசமாக்கக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டது.