
நியூயோர்க் ஜனவரி 16 – நியூயோர்க்கில் இருக்கும் கடை ஒன்றில் ஆயுதத்தை ஏந்தி வந்த நபர்கள் கொள்ளையடித்த சம்பவத்தில், சுமார் 100,000 அமெரிக்க டாலர் மதிப்பிலான உயர்மதிப்புடைய Pokemon கார்டுகள் திருடப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
மூன்று பேர் கடையில் நுழைந்து துப்பாக்கி காட்டி மிரட்டியதுடன், பல Pokemon கார்டுகள், பணம் மற்றும் ஒரு கைப்பேசியை எடுத்துச் சென்றுள்ளனர். திருடப்பட்ட சில கார்டுகளின் மதிப்பு ஒன்றுக்கு 5,500 அமெரிக்க டாலர் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்தன. இதில் Pikachu போன்ற பிரபல கதாபாத்திரங்களின் கார்டுகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கடை உரிமையாளர், அனைத்து வாடிக்கையாளர்களும் பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாக உறுதி செய்தார். அதே நேரத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும் அறியப்படுகின்றது.
இந்த மாத தொடக்கத்தில் கலிபோர்னியாவில் நடந்த மற்றொரு ஆயுத கொள்ளையில் 300,000 அமெரிக்க டாலர் மதிப்பிலான போகிமான் கார்டுகள் திருடப்பட்ட சம்பவமும் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.



