Latestசினிமா

நியூ மெக்சிகோவில் நடிகர் ஜீன் ஹேக்மேனும் மனைவியும் வீட்டில் இறந்து கிடந்தனர்

லண்டன், பிப் 28 – இரண்டு முறை ஆஸ்கார் விருது வென்ற 95 வயதுடைய நடிகர் ஜீன் ஹேக்மேன், ( Gene Hackman ) மற்றும் அவரது மனைவி பெட்ஸி அரகாவா ( Betsy Arakawa ) ஆகியோர் அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநிலத்தில் உள்ள அவர்களது வீட்டில் இறந்து கிடந்ததாக Santa Fe New Mexican இணையதளம் தெரிவித்துள்ளது.

அந்த தம்பதியினர் தங்கள் நாயுடன் இறந்துவிட்டதாகவும், அவர்களது மரணத்தில் சூது எதுவும் இல்லையயென Santa Fe County போலீஸ் அதிகாரி Adan Mendozaவை மேற்கோள் காட்டி அந்த இணையத்தளம் தகவல் வெளியிட்டது.

தீவிர குணச்சித்திர நடிகராக இருந்துள்ள ஹேக்மேன் 1971 ஆம் ஆண்டில் வெளியான போதைப்பொருள் தொடர்பான The French Connection என்ற பரபரப்பான திரைப்படத்திற்கும் மற்றும் 1992 ஆம் ஆண்டு வெளியான Unforgiven திரைப்படத்திற்கும் அகாடமி விருதுகளை வென்றார்.

முன்னாள் கடற்படை வீரரான ஹேக்மேன் 80க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!