Latestமலேசியா

இந்தியச் சமூகத்தின் கரங்களை வலுப்படுத்த 9 உயர் தாக்கத் திட்டங்கள் அமுல்; டத்தோ ஸ்ரீ ரமணன் தகவல்

கோலாலம்பூர்- ஜூலை-20 – இந்தியச் சமூகத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், கடந்தாண்டு முதல் இதுவரை 9 உயர் தாக்கத் திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

SPUMI & SPUMI GOES BIG, Vanakkam MADANI, PENN, BRIEF-i, i-BAP உள்ளிட்டத் திட்டங்களுக்கான கடனுதவிகள், பயிற்சிகள், கூட்டுறவு வளர்ச்சித் திட்டங்கள் அவற்றிலடங்கும் என, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

எந்தவோர் இனத்தையும் புறக்கணிக்காமல், பொருளாதார வளர்ச்சியில் அனைவரையும் அரவணைத்துச் செல்லும், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கத்தின் கடப்பாட்டுக்கு ஏற்ப இது அமைகிறது.

கடந்த மாதம் வரையில், பல்வேறு கடனுதவிகள் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக, 356 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டு, நாடு முழுவதும் 9,000 இந்தியத் தொழில்முனைவோர் பயனடைந்துள்ளனர்.

Tekun Nasional, Amanah Ikhtiar Malaysia, Bank Rakyat, SME Bank, SME Corp உள்ளிட்ட நிறுவனங்கள் வாயிலாக அவ்வுதவிகள் வழங்கப்பட்டன.

இவையனைத்தும் வெறும் எண்கள் அல்ல; மாறாக, மக்கள் குறிப்பாக இந்தியச் சமூகத்தின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் அறிந்து பூர்த்திச் செய்யும் அரசாங்கக் கடப்பாட்டின் அடையாளமாகும் என ரமணன் சொன்னார்.

இந்தியச் சமூகத்துக்கு இன்னும் நிறையத் திட்டங்களைக் கொண்டு வருமாறு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். எனவே, இந்த இடைப்பட்ட காலத்தில் செயல்படுத்த ஏதுவாக, மேலும் சில புதிய முன்னெடுப்புகளை தாம் ஆராய்ந்து வருவதாக ரமணன் கூறினார்.

இந்தியச் சமூகத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் தமது கடப்பாட்டையும் ரமணன் மறுஉறுதிப்படுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!