
சென்னை, மார்ச்-16 – திடீர் நெஞ்சு வலியால் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்திய நேரப்படி இன்று காலை 7.30 மணிக்கு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு ECG உள்ளிட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டு, ரஹ்மானுக்கு இரத்த நாள அடைப்பை அறுவைச் சிகிச்சை இன்றி சரி செய்யக் கூடிய ஆஞ்சியோ சிகிச்சைய அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து 58 வயது ரஹ்மான் மருத்துவர்களின் திவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்கார் நாயகன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது இந்திய திரையுலகத்தினரையும் அவரது இரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.