Latestமலேசியா

பகடி வதை, இணைய மோசடிகள் விவகாரங்களுக்கு தீர்வு காண்பதில் மலேசியாவுடன் டிக் டோக் தளம் ஒத்துழைக்கும் – பிரதமர் அன்வார்

கோலாலம்பூர், பிப் 14 – பகடி வதை மற்றும் இணைய மோசடி விவகாரங்கள்
பிரச்னைக்கு தீர்வு காண்பதில் தொடர்பு அமைச்சு, மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம் மற்றும் பேங்க் நெகாரா ஆகியவற்றுடன் ஒத்துழைப்பதற்கு சமூக வலைத்தளமான Tik Tok உறுதியளித்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரதமராக பதவியேற்ற பின் லத்தின் அமெரிக்க நாடான பெருவிற்கு முதல் முறையாக அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள அன்வார், TIK Tok தலைமை செயல் அதிகாரி Chew Shou Zi தலைமையிலான அதன் பேராளர் குழுவை சந்தித்தபின் இதனை தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் சமூக ஊடக சேவைகள் மற்றும் இணைய உரிமம் வழங்குவதற்கான ஒழுங்குமுறை கட்டமைப்பை செயல்படுத்தும் விவகாரமும் டிக் டோக் குழுவினருடன் விவாதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

மலேசியாவில் டிக் டோக் மூலம் பரவலாக நடைபெறும் பகடி வதை, இணைய மோசடி மிரட்டல், பொய்யான குற்றாச்சாட்டுக்கள் போன்ற விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக நிதியமைச்சருமான அன்வார் தெரிவித்தார்.

மேலும் மலேசியாவில் மடானி அரசாங்கத்திற்கும் டிக்டோக்கிற்குமிடையிலான ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதோடு மலேசியாவில் பெரிய அளவில் முதலீடுகளை நீட்டிப்பதற்கும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

இதுதவிர 2025ஆம் ஆண்டில் ஆசியான் தலைவர் என்ற முறையில் மலேசியா மேற்கோள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவு தெரிவிக்கும் தங்களது கடப்பாட்டையும் டிக் டோக் குழுவினர் தெரிவித்துள்ள தகவலையும் அன்வார் வெளியிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!