பத்து பஹாட், டிசம்பர்-14, அதிக இலாபத்துக்கு ஆசைப்பட்டு, இல்லாத ஒரு பகுதி நேர வேலை மோசடி கும்பலிடம் 115,600 ரிங்கிட்டை பறிகொடுத்துள்ளார், ஜோகூர் பத்து பஹாட்டைச் சேர்ந்த அரசாங்க பல்கலைக்கழக விரிவுரையாளர்.
15 விழுக்காடு இலாபம் பார்க்கலாம் எனக் கூறி மே மாத வாக்கில் பகுதி நேர வேலையொன்று 44 வயது அவ்வாடவரைத் தேடி வந்துள்ளது.
ஆனால், அதற்கு முன்பாக தன்னைப் பதிந்துகொண்டு, கொடுக்கப்படும் இணையத் தளம் வாயிலாக சில பொருட்களை வாங்க வேண்டுமென அவ்வாவடருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது.
பொருட்களை வாங்கியப் பிறகே இலாபத் தொகை கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதற்கு ஒப்புக் கொண்ட அந்த விரிவுரையாளர், மே மாதம் முதல் செப்டம்பர் 30 வரை கட்டம் கட்டமாக 6 வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் பணத்தைப் போட்டுள்ளார்.
ஆனால் சொல்லியபடி இலாபத் தொகை வரவில்லை;
பணத்தை மாற்றிய கையோடு இணையத் தளத்துடனான தொடர்பும் துண்டிக்கப்பட்டது.
இதையடுத்தே தாம் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்து, பத்து பஹாட், ஸ்ரீ காடிங் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார்.