
பத்து மலை, ஏப்ரல்-27-பத்து மலையில் தனது 3 வயது மகனை சித்திரவதை செய்ததாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவரை கோம்பாக் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட சிறுவனின் பாட்டி அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒரே வீட்டில் வசித்து வரும் அந்த பாட்டி, கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் தனது பேரனின் அலறல் சத்தத்தைக் கேட்டுள்ளார்.
தனது மகள், அந்தச் சிறுவனைத் தாக்கியதாக அவர் சந்தேகிக்கிறார்.
அவர் அந்தச் சிறுவனைப் பெற்றெடுத்த தாயாவார்.
அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
இந்தச் செயலுக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது, கோம்பாக் போலீஸ் தெரிவித்தது.
பாதிக்கப்பட்ட சிறுவன் தற்போது மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் 2001-ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால், அருகிலுள்ள போலீஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.



