
செப்பாங், ஆகஸ்ட் 18 – மலேசியாவிலிருந்து விமானம் மூலம் சரியான ஆவணங்களின்றி வெளியேற முயன்ற இரண்டு வெளிநாட்டு ஆண்கள், நேற்று கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (KLIA) கைது செய்யப்பட்டனர்.
எல்லை கட்டுப்பாட்டு மற்றும் பாதுகாப்பு ஆணையம் (AKPS) வெளியிட்ட அறிக்கையில், கைது செய்யப்பட்டவர்கள் 30 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அவ்விருவரும் இந்தியா மற்றும் சீனா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் அறியப்படுகின்றது.
குடிநுழைவுத்துறை அதிகாரிகள் சந்தேகத்துடன் அவர்களின் கடப்பிதழ்களைச் சோதனை செய்தபோது, அவற்றில் உள்ள முத்திரைகள் (security stamps) யாவும் போலியானவை எனக் கண்டு பிடிக்கப்பட்டது.
மேலும், சோதனையில், அவர்கள் நாட்டிற்குள் நுழைந்ததும், வெளியேறியதுமான எந்தவொரு பதிவும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டது.
AKPS-ன் தகவலின்படி, அவர்களின் பாஸ்போர்ட்களில் உள்ள முத்திரைகள், அவர்கள் கெடா மாநிலம் புக்கிட் காயு ஹித்தாம் ICQS மற்றும் ஜோகூர் மாநிலம் தஞ்சூங் குபாங் ICQS வழியாக நுழைந்துள்ளனர் என்று அறிய முடிகின்றது.