Latestமலேசியா

பரபரப்பான சாலையில் பூனைக்குட்டியை காப்பாற்றிய ஆடவருக்கு நெட்டிசன்களின் பாராட்டு குவிகிறது

கோலாலம்பூர், ஜூலை 4 – பரபரப்பான சாலையின் நடுவே சிக்கிக் கொண்ட பூனைக் குட்டியை காப்பாற்றுவதற்கு ஆடவர் மேற்கொண்ட நடவடிக்கை வைரலானதோடு சாலையில் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் அந்த பூனைக் குட்டியை காப்பாற்றிய அந்த ஆடவருக்கு நெட்டிசன்கள் பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவித்து வருகின்றனர்.

டிக்டோக் பயனரால் @nurainrdzuan பதிவேற்றப்பட்ட வீடியோவில், லோரி உள்ளிட்ட வாகனங்கள் சில சென்டிமீட்டர் தூரம் வேகமாகச் சென்றபோது, ​​கருப்பு-வெள்ளை நிற Tuxedo பூனைக்குட்டி சிக்கித் தவிப்பதைக் காட்டுகிறது.

பயனரின் கணவர் என அடையாளம்  காணப்பட்ட அந்த நபர், நெடுஞ்சாலையின் குறுக்கே வேகமாகச் சென்று, சாலையின் மையத்திலுள்ள தடுப்பில் குதித்து வாகன ஓட்டுநர்களை எச்சரிக்கும் வகையில் கையசைத்து , பூனைக்குட்டியை விரைவாகத் தூக்குவதைக் காணமுடிந்தது. அவர்களின் காருக்குள், பூனைக்குட்டி அசைந்தபோது அதன் மூக்கில் இரத்தம் வழிந்தது போல் தெரிந்தது.

உனக்கு அடிபடாமல் போனது அதிர்ஷ்டம் என்று பூனைக்குட்டியை தன் கைகளில் தொட்டுக் கொண்டே அதனை காப்பாற்றிய ஆடவர் கூறுகிறார். அது வேறொரு வாகனத்திலிருந்து விழுந்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அந்த பூனைக்குட்டி கால்நடை மருத்துவரிடம் கொண்டு செல்லப்பட்டு, கால் எலும்பு முறிந்திருப்பது கண்டறியப்பட்டது.

அந்தத் தம்பதியினர் அதற்கு துவா என்று பெயரிட்டனர், பூனைக்குட்டிகள் பயங்கரமான சோதனையைப் பற்றி மனவேதனையை வெளிப்படுத்தும் அதே வேளையில், அந்த தம்பதியினரின் இரக்கம் மற்றும் துணிச்சலையும் சமூக வலைத்தலைவாசிகள் பாராட்டினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!