Latestமலேசியா

பல்கலைக்கழக மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திய ‘தலைவன்’ மாநாடு

பல்கலைக்கழக இந்திய மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில், ‘புரட்சி’ இயக்கத்தின் ஏற்பாட்டில் ‘தலைவன்’ எனும் இருநாள் கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்றது.

அரசியல், சமூகம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஏப்ரல் 26, சனிக்கிழமை பெட்டாலிங் ஜெயா, பிரிக்ஃபீல்ட்ஸ் ஆசியா கல்லூரியில் உமாகாந்தன் ஒருங்கிணைப்பில் அம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.

மாநாட்டின் ஓர் அங்கமாக நடைபெற்ற மாணவர்களுடனான உரையாடலில், மித்ரா தலைவரும் பத்து நாடாளுமன்ற உறுப்பினருமான பி.பிரபாகரன், வணக்கம் மலேசியாவின் நிர்வாக இயக்குநர் தியாகராஜன் முத்துசாமி, மலேசிய வர்த்தகத் தொழிலியல் சங்கத்தின் செயலாளர் டத்தோ Dr AT. குமார ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.

தனது மாணவர் பருவம், அரசியல் ஆர்வமும் ஈடுபாடும், 2018 பொதுத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்கியது உள்ளிட்ட அனுபவங்களை பிரபாகரன் மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.

சமுதாயத்திற்காக துணிந்து குரல் கொடுப்பதில் மறைந்த துன் சாமிவேலுவுக்கு இருந்த தைரியம், பேச்சாற்றல், வசீகரம் ஆகியவற்றை இன்றளவும் தாம் வியந்து பார்ப்பதாக பிரபாகரன் கூறினார்.

அரசாங்க உதவிகள் குறித்து மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.

இவ்வேளையில், வாசகர்களையும் மக்களிடத்தில் அரசியல் மற்றும தலைவர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் வணக்கம் மலேசியா ஆற்றி வரும் பங்கு குறித்து தியாகராஜனிடம் கேட்கப்பட்டது.

அதற்கு, தலைவர் மற்றும் தலைமைத்துவம் இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கியதோடு அரசியல் தொடர்பான விளக்கங்களை மக்களிடையே கொண்டு சேர்க்கும் முயற்சிகளை எடுத்துரைத்தார்.

தமது சமூகக்கடப்பாடாக 10 ஆண்டுகளாக தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு வணக்கம் மலேசியா நடத்தி வரும் ‘மாணவர் முழக்கம்’ போட்டியை நடத்தி, பேச்சாற்றல் மிக்க பலரை உருவாக்கியுள்ளதையும் தியாகராஜன் சுட்டிக் காட்டினார்.

இதனிடயே இரண்டாவது நாளில் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவ்,பெர்சத்து கட்சியின் துணைத்தலைவர் டத்தோ ஶ்ரீ ஹம்சா சைனுடின், MIPP கட்சித் தலைவர் புனிதன் பரமசிவம் உள்ளிட்டோர் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

UPM, USM, UKM, UTM, UPSI, INTI, MMU Cyberjaya உள்ளிட்ட அரசாங்க – தனியார் பல்கலைக்கழகங்களிலிருந்து சுமார் 120 மாணவர்கள் அந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!