
கோலாலம்பூர், அக்டோபர் 17 –
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மலேசிய ரயில் சேவை மையம்(KTMB), KL சென்ட்ரல் மற்றும் பட்டர்வொர்த் நிலையங்களில் 1,000 தீபாவளி பரிசு கூடைகளை பயணிகளுக்கு வழங்கி தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டது.
அதுமட்டுமல்லாமல் தீபாவளி சிறப்பு சலுகையாக மொத்தம் 2,78,792 டிக்கெட்டுகள் தீபாவளி காலப் பயணத்துக்காக வழங்கப்பட்டுள்ள நிலையில், அதில் ETS, KTM Intercity மற்றும் Shuttle Tebrau சேவைகளும் உள்ளடங்கும்.
மேலும் பயணிகளின் அதிகரிப்பை முன்னிட்டு, கே.எல். சென்ட்ரல், படாங் பெசார் பாதையில் இரண்டு கூடுதல் ரயில்கள் இயக்கப்படவுள்ளன என்ற மகிழ்ச்சி செய்தியையும் அறிவித்தனர்.
இந்த முயற்சி பயணத்தை சுலபமாகவும், பாதுகாப்பாகவும் மாற்றுவதுடன், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த ஊக்குவிக்கும் நோக்கத்துடனும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று KTMB தொழில்நுட்ப தலைமை அதிகாரி அஹமாட் நிசாம் முகமட் அமின் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, தெற்கு திசை (KL Sentral–Kluang) ETS சேவைக்கான 30 சதவீத சிறப்பு தள்ளுபடி வருகின்ற அக்டோபர் 20 முதல் நவம்பர் 30 வரை செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
பயணிகள் GO2KLUANG30 என்ற தள்ளுபடி குறியீட்டை பயன்படுத்தி இச்சலுகையைப் பெறுவதோடு
KTMB அனைத்து மலேசியர்களுக்கும் தங்களின் இனிய தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்து கொண்டது