
சிரம்பான், ஜூலை 8 – நீலாய் மந்தினில் உள்ள பள்ளிவாசலில் கோவே நீர் சுத்தகரிப்பு கருவியை திருடியதாக நான்கு தனிப்பட்ட நபர்கள் மீது சிரம்பான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
அவர்கள் அனைவரும் ஜூன் 30 ஆம்தேதி இரவு மணி 8.11 அளவில் இந்த குற்றத்தை புரிந்ததாக மாஜிஸ்திரேட் சைபுல் சயுத்தி ( Saiful Sayoti ) முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
குற்றவியல் சட்டத்தின் 380ஆவது மற்றும் 34 விதியின் கீழ் குற்றம் புரிந்ததாக கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை அவர்கள் அனைவரும் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து மூவருக்கு மூன்று மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. வயதுக்குறைந்த மற்றொரு நபருக்கு சமூக அறிக்கை கிடைக்கும்வரை 1,500 ரிங்கிட் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.