
குவாந்தான், ஜூலை.07 – பகாங், Padang Tengkuவில் Jalan Lipis- Merapoh வின் 23 ஆவது கிலோமீட்டரில் ஐந்து மியன்மார் குடியேறிகளை ஏற்றிச் சென்ற BMW காரொன்று தண்ணீர் தொட்டியில் மோதி விபக்குக்குள்ளானது. காவல்துறையின் சாலைத் தடுப்புச் சோதனையில் இருந்து தப்பிக்க முயன்ற போது அச்சம்பவம் நிகழ்ந்தது.
கிளந்தானில் இருந்து கோலாலம்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த அக்காரில் ஆவணங்கள் இல்லாத மியன்மார் நாட்டவர்கள், அவர்களைக் கடத்துவதற்காக பணியமர்த்தப்பட்டதாக நம்பப்படும் கார் ஓட்டுனர் என அறுவர் இருந்ததாக Lipis காவல் நிலையத் தலைவர் Ismail Man கூறினார்.
காவல் துறையின் சாலைத் தடுப்புச் சோதனை இருப்பதைக் கண்ட ஓட்டுனர், காரை வேகமாகச் செலுத்த முயன்றுள்ளார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து உணவுக் கடையொன்றுக்கு அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் மோதியது. அச்சம்பவத்தில் காயமுற்ற ஓட்டுனரும் இரு மியன்மார் பெண்களும் கைது செய்யப்பட்டனர். மற்ற மூன்று குடியேறிகள் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடி விட்டனர். அவர்கள் தேடப்பட்டு வருகின்றனர். விசாரணையும் தொடக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.



