
குவாந்தான், நவம்பர்-5,
பஹாங், தெலமோங்கில் (Telemong) ஒரு செம்பனைத் தோட்டத்தில் எண்ணெய் பனை ஓலைகளின் குவியலுக்கு அடியில் ஒரு பெண்ணின் அழுகிய உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஜாலான் காராக் – குவாலா பில்லா சாலையின் 19-ஆவது மைலில் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு, பொது மக்களில் ஒருவர் அச்சடலத்தை கண்டு போலீஸுக்குத் தகவல் கொடுத்தார்.
ஆனால் சடலம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என பஹாங் போலீஸ் கூறியது.
இறந்தவருக்குச் சொந்தமானது என நம்பப்படும் பல பொருட்களும் அருகிலேயே கண்டெடுக்கப்பட்டன.
அவற்றில் கருப்பு குளிர் பனியன், பச்சை நிற விளையாட்டு கால்சட்டை, Casio கைக்கடிகாரம், ஒரு ஜோடி கருப்பு செருப்புகள் ஆகியவை அடங்கும்.
சடலம், தெங்கு அம்புவான் அஃப்சான் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை முடிவுகள் வரும் வரையில், இச்சம்பவம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.



