
பாங்கி கடை குறித்த வைரல் வீடியோ: வெளிநாட்டவர்களுக்கு சலுகை சமையல் எண்ணெய் விற்பனை இல்லை – KPDN உறுதி
காஜாங், பிப்ரவரி 16 –
பாங்கி பகுதியில் உள்ள ஒரு கடையில் வெளிநாட்டவர்களுக்கு சலுகை விலையில் வழங்கப்படும் பேக்கெட் சமையல் எண்ணெய் விற்பனை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ தொடர்பாக, சிலாங்கூர் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்கைச் செலவீன அமைச்சான KPDN விளக்கம் அளித்துள்ளது.
வைரலான வீடியோவைத் தொடர்ந்து நேற்று சம்பந்தப்பட்ட அக்கடையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில், வெளிநாட்டவர்கள் பேக்கெட் சமையல் எண்ணெய் வாங்குவதை கடை நிர்வாகம் தடுத்து வந்தது மற்றும் எந்தவித விற்பனையும் நடைபெறவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
எனினும், மேல் விசாரணையில் கட்டுப்பாட்டுப் பொருட்களுக்கான பதிவுப் புத்தகத்தை முறையாக பராமரிக்காதது கண்டறியப்பட்டதால்,அக்கடை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பாங்கியில் உள்ள கடையில் வெளிநாட்டவர்கள் சலுகை சமையல் எண்ணெய் எடுத்துச் செல்கிறார்கள் எனக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதனால், கடை நிர்வாகத்தின் மீது அதிருப்தி தெரிவித்தனர்.
ஆனால் அதிகாரப்பூர்வ ஆய்வின் முடிவில், வெளிநாட்டவர்களுக்கு சலுகை சமையல் எண்ணெய் விற்பனை செய்யப்படவில்லை என்பது தெளிவாக உறுதி செய்யப்பட்டுள்ளது.



