
பாலிங், கெடா, நவம்பர் 21 – கெடா பாலிங்கில் ‘Kampung Ketembar, Masjid Kuala Pegang’ பகுதியிலுள்ள வீடொன்றில் சுமார் ஐந்து மீட்டர் ராஜ நாகம் பிடிபட்டது.
அப்பகுதியில் வசித்து வந்த 70 வயதுடைய பெண்ணொருவரின் வீட்டின் கழிப்பறையில்தான் அந்த ராஜ நாகம் இருந்துள்ளது. அதனை கண்டு அதிர்ச்சியடைந்த அம்மாது உடனடியாக தீயணைப்பு துறையினரை அழைத்துள்ளார்.
ஆறு பேர் கொண்ட தீயணைப்பு குழு சம்பவ இடத்தைச் சென்றடைந்த போது, அந்த ராஜ நாகம் ஒரு மீட்டர் உயரத்தில் எழுந்து, மிகவும் ஆக்ரோஷமாக இருந்ததால், தீயணைப்பாளர்களுக்கு அதனை பிடிக்க 30 நிமிடங்கள் எடுத்துக் கொண்டனர்.
பிடிப்பட்ட அந்த ராஜ நாகம் அருகிலுள்ள இயற்கை வனப்பகுதியில் விடப்பட்டது. மேலும் பருவநிலை காரணமாக பாம்பு போன்ற விலங்குகள் வீட்டினுள் குடியேறாமல் தடுப்பதற்கான முக்கிய வழிமுறைகளை பொதுமக்கள் முன்னெடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.



