
கோலாலம்பூர், மார்ச் 28 -பினாங்கில் ஆர்வம் உள்ள இளைஞர்களைக் கொண்டு கடந்த சில ஆண்டு காலமாக செயல்பட்டுவரும் சோழன் பைக்கர்ஸ் குழுவினர் அண்மையில் தங்களது 3 நாள் நீண்டதூர பயணத்தின் ஒரு பகுதியாக பத்துமலை வந்தடைந்தனர்.
பத்துமலையில் இருக்கும் ராயல் என்பீல்ட் ஷோரூம் (Royal Enfield Showroom) வந்த அவர்களை
Legendary riders Malaysia Clubன் தோற்றுநர் R. மகேந்திரமணி ( Magendramani ) வரவேற்று அதன் தலைவரும், போலீஸ் துறை அதிகாரியுமான ஸ்ரீ கார்த்திகேசருக்கு பொன்னாடை அணிவித்து நினைவுச் சின்னமும் வழங்கினார்.
சோழன் குழுவின் துணைத் தலைவர் வினோத்நாதன் ஏற்பாட்டில் இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட் இந்த நீண்ட பயணத்த்தில் 15 இளைஞர்கள் கலந்துக் கொண்ட நிலையில் பினாங்கு, கோலாலம்பூர் , மாரன் மரத்தாண்டவர் ஆலயம், குவந்தான் , மற்றும் கேமரன் மலை வரை அவர்கள் பயணித்தனர்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உயர் இயந்திர ஆற்றலைக் கொண்ட ராயல் என்பீல்ட் (Royal Enfield) மோட்டார் சைக்கிள்களின் உரிமையாளர்களான பல இளைஞர்கள் சோழன் பைக்கர்ஸ் கிளப்பில் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர்.
உயர்ந்த இயந்திர ஆற்றலைக் கொண்ட மோட்டார் சைக்கிள்களை வாங்கி ஓட்டுவது நல்ல பொழுதுபோக்காக இருந்தாலும் இந்த குழுவில் இருக்கும் உறுப்பினர்கள் பல்வேறு சமூக நலத் திட்டங்களிலும் பங்கேற்று வருகின்றனர்.
அதே வேளையில் இத்தகைய மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தும்போது மிகவும் பொறுப்புடன் சாலை விதிமுறைகளை பின்பற்றவேண்டும் என மகேந்திர மணி கேட்டுக்கொண்டார்.
இளைஞர்களை நல்வழிப்படுத்தவும் நமது சமுதாயத்துக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உணர்வை கொண்ட இந்த மோட்டார் சைக்கிளோட்டிகள் குழுவினருக்கு தொடர்ந்து ஆதரவை வழங்கி வரும் வணக்கம் மலேசியாவுக்கு அவர் தனது நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.