Latestமலேசியா

பினாங்கில் தாக்காப்பட்ட முதியவர் இரண்டு நாட்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

பினாங்கு, ஜனவரி 27 – பினாங்கு கம்போங் ஜாவா பகுதியில் உள்ள உணவுக் கூடத்தில் தாக்கப்பட்ட முதியவர், இரண்டு நாட்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Seberang Perai Utara காவல் துறை தலைவர் Anuar Abdul Rahman கூறுகையில், தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளதாக தெரிவித்தார். உயிரிழந்த நபர் சுமார் 60 வயதுடையவராகவும், அவரிடம் எந்த அடையாள ஆவணங்களும் இல்லையெனவும் கூறப்படுகிறது.

பிரேத பரிசோதனை அறிக்கையில், மரணத்திற்கு காரணம் இதய நோய் எனவும், உடலின் இடது பக்க விலா எலும்புகள் முறிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் கடுமையான காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் விசாரணை செய்யப்பட்டு வருவதுடன், அவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!