Latestமலேசியா

பினாங்கில் பிராணிகளைக் கொல்வோர் குறித்து தகவல் கொடுத்தால் 20,000 சன்மானம்; NGO அறிவிப்பு

ஜோர்ஜ்டவுன், ஜூலை-12 – பினாங்கில் தெரு நாய்கள் பூனைகள் மற்றும் வனவிலங்குகளைக் கொல்பவர்கள் அல்லது கொடுமைப்படுத்துபவர்கள் குறித்து தகவல் கொடுப்போருக்கு, 20,000 ரிங்கிட் சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் நேரடியாகவும் சரிபார்க்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என, IAPWA எனப்படும் பினாங்கு விலங்குகள் பாதுகாப்பு மற்றும் நலன்களுக்கான அனைத்துலக உதவி அமைப்பு கூறியது.

இந்த வெகுமதி உண்மையான ஆதாரங்களுக்கு மட்டுமே பொருந்தும்; மறுபதிவு செய்யப்பட்ட அல்லது வைரல் உள்ளடக்கத்திற்கு அல்ல; மேலும் காலக்கெடு எதுவும் இல்லை.

பினாங்கு கொடி மலை சம்பவம் உட்பட, அண்மையில் நடந்ததா அல்லது கடந்த காலங்களில் நடந்ததா என்ற பேதமில்லை; மக்களிடமிருந்து ஆதாரப்பூர்வமான தகவல்களை மட்டுமே தாங்கள் எதிர்பார்ப்பதாக அவ்வமைப்பு கூறிற்று.

ஜூலை 5-ஆம் தேதி கொடி மலையில் 7 நாய்கள் 3 பூனைகள் மற்றும் 5 பறவைகள் மர்மமான முறையில் செத்துக் கிடந்தது குறித்து ஞாயிறன்று பினாங்கு மலைக் கழகம் போலீஸில் புகார் செய்த நிலையில், இந்த சன்மான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தெரு நாய்களே அதிகம் குறி வைக்கப்படுவதாகக் கூறிய அக்கழத்தின் தலைமை நிர்வாகி Cheok Lay Leng, அந்நாய்கள் கடித்ததாக அண்மையில் மலையேறிகளும் சுற்றுப் பயணிகளும் புகாரளித்ததை சுட்டிக் காட்டினார்.

இவ்வேளையில் கொடி மலையில் கண்டெடுக்கப்பட்ட பிராணிகள் மற்றும் பறவைகளின் சடலங்களிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வுக் கூட சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

அவை சாப்பாட்டில் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதாக நம்பப்பட்டாலும், உண்மைக் காரணத்தைக் கண்டறிய அச்சோதனை முக்கியமென பினாங்கு கால்நடை சேவைத் துறை இயக்குநர் Dr சாய்ரா பானு ரெஜாப் தெரிவித்தார்.

அச்சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தோர், பினாங்கு மாநகர் மன்றத்தை 04-263-7000 அல்லது 04-263-7637 எண்களுக்கு அழைத்தோ அல்லது 016-200-4082 என்ற எண்ணுக்கு வாட்சப் செய்தியோ அனுப்பலாம்.

அதே சமயம் IAPWA-வை தொடர்புகொள்ள விரும்புவோர் penang@iapwa.org என்ற மின்னஞ்சல் முகவரியையும் 010-388-3487 எற்ற வாட்சப் எண்ணையும் பயன்படுத்தலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!