Latestமலேசியா

பினாங்கில் பூட்டப்பட்ட வீட்டில் ஆடவர் இறந்து கிடந்தார்

ஜோர்ஜ் டவுன் , ஜூலை 16 – பினாங்கில் Hong Seng பகுதியில் உள்ளே பூட்டப்பட்டிருந்து தனது வீட்டிற்குள் 79 வயதுடைய முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து பின்னிரவு மணி 12.01 அளவில் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு பாகான் ஜெர்மல் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த ஏழு தீயணைப்பு வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்.

அவ்வீட்டின் உள்ளே வயதான ஆடவர் ஒருவர் இருப்பதாக போலீசார் தெரிவித்ததைத் தொடர்ந்து வீட்டிற்கு வெளியே இருந்த பூட்டை கட்டாயமாக வெட்டி தீயணைப்பு வீரர்கள் உள்ளே சென்று பார்த்தபோது லிம் பான் ஹெங் ( Lim Ban Heng ) என்ற அடையாளம் காணப்பட்ட ஆடவர் சுயநினைவற்ற நிலையில் இருந்துள்ளார்.

எனினும் அவர் இறந்துவிட்டதை மருத்துவ உதவியாளர்கள் பின்னர் உறுதிப்படுத்தியதாக பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் நடவடிக்கைக்கான துணை இயக்குனர் ஜோன் சகூன் பிரன்சிஸ் ( John Sagun Francis ) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!