ஜியோர்ஜ்டவுன், அக்டோபர்-5 – பினாங்கு, ஜியோர்ஜ்டவுன், பாயான் பாரு, பந்தாய் மருத்துவமனை அருகே மோட்டார் சைக்கிளோட்டியை மோதி விட்டு நிற்காமல் சென்ற காரோட்டியை போலீஸ் தேடி வருகிறது.
சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் இருப்பின், விசாரணைகளுக்கு வந்துதவுமாறு, பாராட் டாயா மாவட்ட போலீஸ் தலைவர் கமாருல் ரிசால் ஜெனால் (Kamarul Rizal Jenal) கேட்டுக் கொண்டார்.
அம்மருத்துவமனை அருகேயுள்ள சாலை சமிக்ஞை விளக்குப் பகுதியில் அச்சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
பாதிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டியான 24 வயது பெண்ணுக்கு, அதில் முகம், பற்கள், முதுகு, தோள்பட்டை ஆகிய இடங்களில் காயமேற்பட்டது.
ஆனால் வைரலான வீடியோவைப் பார்த்த வலைத்தளவாசிகள், அது விபத்து போல் தெரியவில்லை என்கின்றனர்.
வெள்ளை நிறக் கார் வேண்டுமென்றே மோட்டார் சைக்கிளை இடித்துத் தள்ளியது போல் தான் உள்ளதென கருத்து பதிவிட்டு வருகின்றனர்.