
ஜோர்ச் டவுன், செப் 4 – பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் புதிய தலைவராக, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது நியமனம் ஆகஸ்டு 30ஆம் திகதி முதல் அமலுக்கு வந்த நிலையில், 2024ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் திகதி முடிவடைவதாக பினாங்கு முதல்வர் Chow Kon Yeow தெரிவித்துள்ளார்.
தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளதன் வழி, இந்த அறவாரியத்தில் ஒட்டுமொத்த செயல்பாட்டினை மேம்படுத்துவார் என தாம் நம்புவதாக Chow Kon Yeow கூறினார்.
2008ஆம் ஆண்டு முதல் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவராகவும், வாரிய உறுப்பினராகவும் ராயர் இருந்து வருகிறார்.
இதனிடையே, இந்த அறவாரியத்தின் புதிய உறுப்பினர்களின் பட்டியலை விரைவில் ராயர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவராக இதற்கு முன் பினாங்கின் முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.