
ஜோர்ஜ் டவுன், பிப் 20 – பினாங்கில் Pulau Tikus சிலுள்ள உணவு மையத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எலிகளின் சடலங்கள் , எலி கழிவுகள் மற்றும் கரப்பான் பூச்சிகளின் குவியல்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, Pulau Tikus இல் உள்ள ஒரு உணவு மையத்தை நேற்று தொடங்கி 14 நாட்களுக்கு மூடும்படி பினாங்கு மாநகர் மன்றமான MBPP உத்தரவிட்டுள்ளது.
காப்பிக் கடை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட வளாகத்தின் தூய்மை திருப்திகரமாக இல்லையென்று MBPP வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அந்த உணவு மையத்தில் வாடகைக்கு விடப்பட்டிருந்த கடையும், பாழடைந்த நிலையில் துர்நாற்றத்துடன் இருந்ததையும் பினாங்கு மாநகர் மன்ற அதிகாரிகள் கண்டறிந்தனர்.
அந்த உணவு மையம் நடத்துனருக்கு MBPP உரிமம் வழங்கும் அதிகாரிகள் கண்டனம் தெரிவித்ததோடு தூய்மை தொடர்பான ஆலோசனையும் வழங்கினர்.
பூச்சிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கை , பாழடைந்த கடை கூரைகளை மாற்றுதல் மற்றும் பிளாஸ்டிக் ஸடிரோவுக்கான (straw) தடையை அமல்படுத்துவதும் பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கையில் அடங்கும் .