
கோலாலம்பூர், மார்ச் 20 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் மாணவர் ஒருவர் தெரிவித்த புகாரைத் தொடர்ந்து, பேராக்கின் Kamuntingல் உள்ள SK Long Jaafarரில் உள்ள உடைந்த கழிப்பறைகளை சரிசெய்ய இரண்டு நாட்கள் மட்டுமே ஆனது.
Kamuntingல் உள்ள ரமலான் சந்தைக்கு அன்வார் சென்றபோது அவரை வெள்ளிக்கிழமை சந்தித்த மாணவர் ஒருவர், இரண்டு கழிப்பறைகள் உடைந்துள்ளன, இரண்டும் இன்னும் பயன்படுத்தக்கூடியவை என்று தெரிவித்திருந்தார்.
உடைந்த கழிப்பறைகள் ஞாயிற்றுக்கிழமை சரிசெய்யப்பட்டுள்ளன என்று அன்வாரின் அரசியல் செயலாளர் Muhammad Kamil Abdul Munim தனது சமூக ஊடக தளத்தில் தெரிவித்திருக்கிறார்.
Kamunting ரமலான் சந்தைக்கு வருகை தந்தபோது SK Long Jaafarரில் உள்ள கழிப்பறை பிரச்சினைகள் குறித்து டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு சமர்ப்பிக்கப்பட்ட நேரடி புகாருக்கு தீர்வு காணப்பட்ட விவரம் குறித்த தகவல் தனக்கு கிடைக்கப்பெற்றதாக அவர் தெரிவித்தார்.
தனது சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட 25 வினாடிகள் கொண்ட காணொளியில், பள்ளியில் உடைந்த கழிப்பறைகள் முழுமையாக சரிசெய்யப்பட்டு பயன்படுத்த தயாராக உள்ளன என்பதை உறுதிப்படுத்தும் புகைப்படங்களையும் கமில் இணைத்துள்ளார்.