Latestமலேசியா

பிரதமர் அன்வார்: VM2026-ல் “Cerita Malaysia Kita” மூலம் உலகுக்கு மலேசியாவின் வண்ணமயமான கதை

சன்வே, பிப்ரவரி-6,

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், சன்வே லேகூனில் “Cerita Malaysia Kita” என்ற தேசிய சுற்றுலா ஊக்குவிப்பு முயற்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்துள்ளார்.

உலகுக்கு மலேசியாவின் வண்ணமயமான கதைகளைக் கொண்டுச் செல்லும் இது, ‘2026 மலேசியாவுக்கு வருகைத் தரும் ஆண்டு’ பிரச்சார இயக்கத்தின் தொடக்கமாகும்.

சன்வே குழுமமும் The Weststar குழுமமும் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சி, அரசாங்கம் மற்றும் தனியார் துறையை ஒருங்கிணைத்து ‘மலேசியா’ என்ற முத்திரையை வலுப்படுத்தும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில், Sunway Tiny Toys மற்றும் Malaysia Attraction Passport கடப்பிதழ் என்ற 2 முக்கிய சுற்றுலா திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இவை மலேசியாவின் பாரம்பரியத்தை, தனித்துவமான ஈர்ப்புகளை உலகிற்கு வெளிப்படுத்தும் முயற்சியாகும்.

பிரதமர் அன்வார் தமதுரையில், ஒற்றுமை, அமைதி மற்றும் ஒருங்கிணைந்த முயற்சியால் மட்டுமே மலேசியா உலகத் தரத்தில் உயர முடியும் என வலியுறுத்தினார்.

சுற்றுலா, கலை, பண்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ தியோங் கிங் சிங், தொழில்முனைவோர்-கூட்டுறவு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்டீவன் சிம், தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

கலாச்சார நிகழ்ச்சிகள், இசை, மற்றும் வானவேடிக்கையுடன் விழா இனிதே நிறைவடைந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!