மணிலா, டிச 11 – பிலிப்பைன்ஸ் Negros தீவில் kanlaon எரிமலை குமுறத் தொடங்கியதால் அங்கிருக்கும் சுமார் 90,000 மக்கள் வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாண்டில் இரண்டாவது முறையாக அந்த எரிமலை கடந்த திங்கட்கிழமையன்று குமுறியது. இதனால் அதிலிருந்து வெளியேறிய சாம்பல் மற்றும் கரும் புகை காற்றில் 4,000 meter உயரத்திற்கு காணப்பட்டது.
இதனைத் தொடர்ந்து எதிர்வரும் வாரங்களில் தீம்பிழம்புகளுடன் எரிமலை குமுறல் அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாக அபாய எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிமலை சாம்பல் வீடுகளில் சூழக்கூடும் என்பதால் மக்கள் சுகாதார மிரட்டலை எதிர்நோக்குவார்கள் என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆகக்கடைசியாக ஜூன் 3ஆம்தேதி Kanlaon எரிமலை குமுறியது.