
கோலாலம்பூர், ஏப்ரல்-11, பி.கே.ஆர் கட்சித் தேர்தல் நெறிமுறையோடும் குடும்ப உணர்வோடும் நடைபெறுவதை உறுதிச் செய்யுமாறு, போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.
தேர்தல் சுமூகமாகவும் பிரிவினைவாதத்தைத் தூண்டாமலும் நடைபெற வேண்டியதை உறுதிச் செய்வது கட்சி உறுப்பினர்களின் கடமையாகும் என, பிரதமருமான அவர் சொன்னார்.
கட்சித் தேர்தல் ஜனநாயகமும் கட்டிக் காக்கப்பட வேண்டும்.
பி.கே.ஆர் என்பது வெறும் அரசியல் கட்சியல்ல; மாறாக மக்கள் போராட்டத்தின் அடையாளமாகும்.
அதனை உணர்ந்து ஆரோக்கியமாக போட்டியைச் சந்தித்து வென்று வாருங்கள் என அனைத்து வேட்பாளர்களுக்கும் டத்தோ ஸ்ரீ அன்வார் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
நேர்மையான, நம்பத்தகுந்த, கடப்பாடுமிக்க மற்றும் உண்மையிலேயே மக்களுக்குச் சேவையாற்றக் கூடிய வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்குமாறும் அவர் வலியுறுத்தினார்.
பி.கே.ஆர் உயர்மட்ட பதவிகளுக்கானத் தேர்தல் மே 24-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
அதற்கு முன் இன்று தொடங்கி ஏப்ரல் 20 வரை தொகுதித் தேர்தல்கள் நடைபெறுகின்றன.