
கோலாலம்பூர், ஜனவரி-17,Sports Toto Supreme 6/58 jackpot குலுக்கலின் பரிசுத் தொகை, நாளை சனிக்கிழமை 100 மில்லியன் ரிங்கிட்டைத் தாண்டி புதிய உச்சத்தைத் தொடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
Jackpot குலுக்கல் வரலாற்றில் இதற்கு முந்தைய ஆக உயரியப் பரிசுத் தொகை, 2022-ல் பதிவான 97.75 மில்லியன் ரிங்கிட்டாகும் என, Sports Toto தலைமை செயலதிகாரி Nerine Tan கூறினார்.
Jackpot பரிசுத் தொகை உயர்ந்திருப்பதால், இந்த இரண்டு வாரங்களாக லாட்டரி சீட்டு விற்பனையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக அவர் சொன்னார்.
ஏராளமானோர் டிக்கெட் வாங்குவதால் அவர்களில் ஒருவர் வெற்றிப் பெற்று கோடீஸ்வரர் ஆகும் வாய்ப்பும் அதிகமென்றார் அவர்.
இவ்வாரக் கடைசியில் கிடைக்கும் அவ்வெற்றி, சீனப் புத்தாண்டுக்கு முன்பாக வாழ்க்கையில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வருமென Nerine நம்பிக்கைத் தெரிவித்தார்.
ஜனவரி 15 வரைக்குமான நிலவரப்படி, Sports Toto Supreme 6/58 Lotto குலுக்கலுக்கான பரிசுத் தொகை 94.27 மில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது.
வரலாற்றில் பதிவான இரண்டாவது மிக உயரிய பரிசுத் தொகை இதுவாகும்.
லாபுவானைச் சேர்ந்த அதிர்ஷ்டசாலி ஒருவர் EZ-Bet தேர்வின் வழி அதன் பாதித் தொகையை வென்றார்.