
கோலாலம்பூர், மார்ச் 27 – பிரசரனா மலேசியா பெர்ஹாட்
(PRASANA) நிறுவனத்திற்கு 1,660 புதிய டீசல் மற்றும் மின்சார பஸ்களை மூன்று ஆண்டு காலப்பகுதியில் கட்டம் கட்டமாக வாங்க 1.9 பில்லியன் ரிங்கிட்டை நிதியமைச்சு ஒதுக்கியுள்ளது. மொத்தம் 310 பஸ்கள் டீசல் இயந்திரங்கள் யூனிட்களாக இருக்கும். அந்த வகை இயந்திரங்கள் பயன்படுத்தும் கடைசி குழுவாக அவை இருக்கும். எஞ்சியவை மின்சார வாகன (EV) பஸ்களாக இருக்கும் என இரண்டாவது நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமிர் ஹம்சா ( Amir Hamzah Azman ) தெரிவித்திருக்கிறார்.
டீசல் இயந்திரம் 310 பஸ்கள் இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் விநியோகிக்கப்படும் என்பதோடு இதர 250 EV பஸ்களின் விநியோகம் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கும் என அவர் கூறினார். மேலும் 1,000 மின்சார வாகன பஸ்கள் இந்த அமைப்பில் கட்டம் கட்டமாக சேர்க்கப்படும், இதற்கு மொத்தம் 1.9 பில்லியன் ரிங்கிட் செலவாகும் என இன்று PRASARANAவின் இன் RapidKL On – Demand முறையை அறிமுகப்படுத்திய பின் செய்தியாளர்களிடம் Amir Hamzah Azman தெரிவித்தார்.