Latestமலேசியா

புத்தாண்டு செய்தியில் ஒற்றுமை, அனைவரையும் உள்ளடக்கிய செழிப்பை வலியுறுத்தும் – பிரதமர் அன்வார்

புத்ராஜெயா, ஜனவரி-1- பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், பிறந்துள்ள புத்தாண்டை முன்னிட்டு, நாட்டில் ஒற்றுமையும் அனைவரையும் உள்ளடக்கிய செழிப்பும் அவசியம் என மலேசிய மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

இனம், மதம், பின்னணி என வேறுபாடுகளைத் தாண்டி, ஒற்றுமையுடன் செயல்பட்டால்தான் நாட்டின் முன்னேற்றம் சாத்தியமாகும் என, தமது 2026 புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் அவர் வலியுறுத்தினார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி அனைத்து தரப்பினருக்கும் சமமாக பயனளிக்க வேண்டும் என்றும், ‘மலேசியா மடானி’ கொள்கையின் அடிப்படையில் நீதியும், நேர்மையும், பரிவும் கொண்ட நிர்வாகம் தொடரும் என்றும் பிரதமர் உத்தரவாதம் அளித்தார்.

அரசாங்கத்தின் சீர்திருத்தங்கள், மக்களுக்கு உண்மையான பலனை வழங்கும் வகையில் செயல்படுத்தப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

இதனிடையே, பிரதமரும் அவரது துணைவியார் டத்தோ ஸ்ரீ Dr வான் அசிசா வான் இஸ்மாயிலும், புத்தாண்டில் நாட்டில் அமைதி, ஒற்றுமை மற்றும் நலன் நிலவ வாழ்த்துத் தெரிவித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!