
கோலாலம்பூர், மார்ச்-12-பூச்சோங்கில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டு பக்கத்தில் அமைக்கப்பட்ட இந்து தெய்வ சன்னதியை அகற்றுமாறு, மலேசிய இந்து சங்கம் அறிவுறுத்தியுள்ளது.
Threads சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட புகைப்படம் வைரலானதால், பாதுகாப்பு மற்றும் இடநெருக்கடி குறித்து வலைத்தளவாசிகள் கவலை தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்து சங்கத்தின் துணைத் தலைவர் ஆர்.எஸ். மோகன் ஷான், சன்னதிகள் தனிப்பட்ட சொத்து எல்லைக்குள் மட்டுமே அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
மாறாக இது போல், படிக்கட்டுக்கு அருகில் அமைத்து, ஆபத்து அவசர காலங்களில் வெளியேற்ற பாதையை மறைக்கக் கூடாது என அவர் நினைவுறுத்தினார்.
பொதுவான இடங்களில் மத கட்டுமானங்கள் அமைப்பதை சங்கம் ஊக்குவிக்காது எனவும் அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே, அனுமதியின்றி கட்டப்பட்டை கோயில் விவகாரம் சர்சையாகியுள்ள நிலையில், இப்புதியச் சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.



