Latestமலேசியா

பூச்சோங் தாமான் புத்ரா பெர்டானாவில் பள்ளிவாசல் அருகே புல்வெளியில் தீ ; 44 வாகனங்கள் எரிந்து சேதம்

பூச்சோங் தாமான் புத்ரா பெர்டானாவில் பள்ளிவாசல் அருகே புல்வெளியில் தீ ; 44 வாகனங்கள் எரிந்து சேதம்

பூச்சோங், பிப்ரவரி-12,

பூச்சோங் தாமான் புத்ரா பெர்டானாவில் உள்ள ஒரு பள்ளிவாசல் அருகே புல்வெளியில் ஏற்பட்ட தீ விபத்து, அருகிலிருந்த திறந்த வெளி வாகன நிறுத்துமிடத்திற்குப் பரவி 44 வாகனங்களை எரித்து சேதப்படுத்தியது.

நேற்று பிற்பகல் 2.40 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்து, சைபர்ஜெயா, பாங்கி தீயணைப்பு நிலையங்களிலிருந்து வீரர்கள் சம்பவ இடம் விரைந்து தீயைக் கட்டுப்படுத்தினர்.

சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் இருந்த புல்வெளியில் தீ பரவியது.

மாலை 6.20 மணியளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.

இச்சம்பவத்தில் உயிரிழப்போ காயமோ ஏற்படவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!