Latestமலேசியா

பெட்டாலிங் ஜெயாவில் இடி மின்னலின் போது கார் மீது மரம் சாய்ந்தது; காயமின்றி உயிர் தப்பியப் பெண்

பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் -3, சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயா, தாமான் மெகாவில் காரின் மீது மரம் சாய்ந்து விழுந்ததில், 33 வயது பெண் காயமின்றி உயிர் தப்பினார்.

நேற்றிரவு 7.30 மணியளவில் ஏற்பட்ட இடி மின்னலுடன் கூடிய கனமழையின் போது அச்சம்பவம் நிகழ்ந்தது.

தகவல் கிடைத்து வந்துசேர்ந்த 8 தீயணைப்பு வீரர்கள், மரத்தை அறுத்து, காருக்குள் சிக்கியிருந்த பெண்ணை பாதுகாப்பாக மீட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர்.

இவ்வேளையில் கோலாலம்பூர் தாமான் மெலாவாத்தியில் நிகழ்ந்த அதே போன்றதொரு சம்பவத்தில், 3 கார்கள் மீது மரம் விழுந்தது.

தீயணைப்புக் குழு இரம்பத்தைக் கொண்டு மரத்தை அகற்றி, போக்குவரத்தை சீராக்கியது.

அதிலும் எவரும் காயமடையவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!