
கோலாலம்பூர், மார்ச்-20 – உள்ளூர் தமிழ் சினிமாவின் அடுத்தப் படைப்பாக ‘ஹீரோ ப்ரண்-டு’ (Hero Friend-U) எனும் திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது.
Dove Eyes Entertainment நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் மார்டின் ஆர். சந்திரன், நண்பர்களுக்கிடையில் நடக்கும் காதல் – நகைச்சுவை சம்பவங்களை 2 மணி 10 நிமிடங்களுக்கு சுவாரஷ்யமான படமாகத் தொகுத்து வழங்கியுள்ளார்.
தேவகுரு சுப்பையா, கவிதா, ஷாபி, ரவின்ராவ் சந்திரன், செலினா ஜெய், தேவகன்னி, ஷாஹாருடின், செந்தில் குமரன் முனியாண்டி, திலிப் குமார் என ஒரு பெரிய இளைஞர் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.
கோலாலம்பூர், சிலாங்கூர், பேராக், சிரம்பான், ஜோகூர், பினாங்கு., சபா, மலாக்கா, கெடா, பஹாங் ஆகிய இடங்களில் மொத்தம் 31 திரையரங்குகளில் இப்படம் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து தரமான படங்களை அளித்து வரும் மலேசியத் தமிழ்த் திரப்பட வரிசையில் இந்த ‘ஹீரோ ப்ரண்-டு’ படமும் இரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாரக் கடைசி விடுமுறையில் குடும்பத்தோடு திரையங்கிற்குச் சென்று இப்படத்தைப் பார்த்து நம் கலைஞர்களை ஊக்குவிக்கலாமே.