கோலாலம்பூர், மே 11 – கோலாலம்பூரில் Jalan Yap Kwan னிலுள்ள பொழுது போக்கு விடுதியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பில் விசாரணை நடத்திய போலீசார் இரண்டு ஆடவர்களை கைது செய்தனர். அவர்கள் இருவரும் நேற்று மதியம் பத்து கேவ்ஸ் வட்டாரத்தில் கைது செய்யப்பட்டனர். தொடக்க விசாரணையில் அந்த சம்பவத்தில் தீவிரவாத தரப்புக்கள் எவருக்கும் இதில் தொடர்பு இல்லையயென கோலாலம்பூர் போலீஸ் தலைவர் Rusdi Isa தெரிவித்தார்.
அந்த இரண்டு சந்தேகப் பேர்வழிகளையும் விசாரணைக்காக தடுத்து வைக்கும் உத்தரவு பெறப்படும் என அவர் கூறினார். அந்த பொழுதுபோக்கு விடுதியின் உரிமையாளர் மற்றும் அதன் நிர்வாகியிடமும் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர் . தீ மற்றும் கிரிமினல் மிரட்டல் தொடர்பாக இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.