
புத்ராஜெயா, மார்ச்-20 – ஏழாண்டுகளுக்கு முன்பு சிரம்பான் கூட்டரசு சாலையில் மரம் வேரோடு சாய்ந்து மேலே விழுந்ததில் காயமடைந்த மோட்டார் சைக்கிளோட்டிக்கு, 216, 949 ரிங்கிட் இழப்பீட்டை வழங்குமாறு சிரம்பான் மாநகர மன்றமான MBS உத்தரவிடப்பட்டுள்ளது.
சிரம்பான் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை இரத்துச் செய்து, புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் அவ்வுத்தரவைப் பிறப்பித்தது.
Iqmal Izzudeen-னுக்கான இழப்பீடு மற்றும் காயத்திற்கான சிகிச்சை செலவுகளை அத்தொகை உட்படுத்தியுள்ளது.
சாலையோர மரங்களைப் பராமரிப்பதில் அட்சியம் காட்டியதால் நடந்த சம்பவத்துக்கு MBS பொறுப்பேற்றே ஆக வேண்டுமென, மூவரடங்கிய நீதிப குழு ஒருமனதாக தீர்ப்பளித்தது.
2018-ஆம் ஆண்டு மே மாதம் 1-ஆம் தேதி PLUS நெடுஞ்சாலையில் ராசா டோல் சாவடிக்கு அருகே சாலை சமிக்கை விளக்குப் பகுதியில் நின்றிருந்த போது, Iqmal மீது மரம் சாய்ந்து அவர் காயமடைந்தார்.