Latestமலேசியா

போட்டிக்சன் ஹோட்டலில் 8ஆவது மாடியிலிருந்து விழுந்து பெண் மரணம்

புத்ரா ஜெயா, ஜுன் 26 – போட்டிக்சனில் உள்ள ஹோட்டல் ஒன்றின்
8ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்த பெண் ஒருவர் இறந்து கிடக்கக் காணப்பட்டார். நேற்று மாலை மணி 6.30 அளவில் நடந்த இச்சம்பவம் குறித்து தங்களுக்கு தெரிவிக்கப்பட்டதாக போட்டிக்சன் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் தலைவர் கமால் திமார் ( Kamal Timar )
தெரிவித்தார். அந்த ஹோட்டலின் 8ஆவது மாடியிலிருந்து விழுந்த அப்பெண்ணின் உடல் முதல் மாடியிலுள்ள ஹோட்டல் முற்றத்தில் காணப்பட்டது.

சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த மருத்துவ அதிகாரிகள் அப்பெண் இறந்ததை உறுதிப்படுத்தினர். மேல் விசாரணைக்காக அப்பெண்ணின் உடல் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவத்தை உறுதிப்படுத்திய போட்டிக்சன் போலீஸ் தலைவர் மஸ்லான் உடின் ( Maslan Udin) இது குறித்து இன்னமும் விசாரணை நடைபெற்றுவருவதாக தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!